Kathir News
Begin typing your search above and press return to search.

வை.கோ-விற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ்..!

வை.கோ-விற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ்..!

ParthasarathyBy : Parthasarathy

  |  22 May 2021 10:22 AM GMT

ம.தி.மு.க கட்சியின் பொதுச்செயலலாளரான திரு வை.கோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ம.தி.மு.க கட்சியின் தொண்டர்கள் அவரது பொதுச்செயலாளரின் பிறந்தநாளை மிகவும் மகிழிச்சியுடன் கொண்டாடுகின்றனர். அது மட்டுமின்றி பல அரசியல் கட்சி தலைவர்கள் திரு. வைகோ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .


ஆ.இ.அ.தி.மு.க. வின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் திரு.வை.கோ அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் . அவர் கூறுகையில் "தனது சகோதரர் மற்றும் ம.தி.மு.க.வின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளருமான திரு.வை.கோபால்சாமி என்கிற (திரு.வைகோ) விற்கு தனது உளம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் அவர் நீண்ட ஆயுளோடும் , நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியாக வாழவும் வாழ்த்துவதாக" அவர் தெரிவித்தார்.


அரசியலில் எதிர் திசையில் பயணித்தாலும் சக மனிதனாக திரு. வைகோவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த திரு. ஓ.பன்னீர்செல்வத்தின் செயல் பாராட்டுதற்குரியது. இவ்வாறு அரசியலில் இருக்கும் அனைவரும் தனது எதிர் திசையில் பயணிப்பவரை எதிரியாக கருதாமல் அவர்களை கருத்தியல் ரீதியாக எதிர் கொண்டால் இங்கு ஆரோக்கியமான அரசியல் உருவாகும் என்பது சாமானியரின் எதிர்பார்ப்பு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News