கொரோனோ'வால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைக்கவேயில்லை - சொல்வது மா.சுப்பிரமணியன்..!
By : Mohan Raj
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனோ இறப்பு எண்ணிக்கைக்கும், அரசு அறிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து அறிக்கையில் காண்பித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச்சுக்கள் உலவி வந்த நிலையில் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "கொரோனோ இறப்பு எண்ணிக்கையை அரசு குறைத்து காண்பிப்பதாக வரும் செய்திகள் உண்மை அல்ல" எனவும்,
"தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொடர்பாக ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட உள்ளது. அந்தக் குழு 2 நாள்களில் கருப்பு பூஞ்சை குறித்த ஆய்வைத் தொடங்கவுள்ளனர்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த நான்கு நாள்களில் கரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளது" எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.