Kathir News
Begin typing your search above and press return to search.

பெருங்குடி மண்டல அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் கூட்டமாக தி.மு.க-வினர் செய்த அட்டகாசம்..!

பெருங்குடி மண்டல  அலுவலகத்தில் ஊரடங்கு காலத்தில் கூட்டமாக தி.மு.க-வினர் செய்த அட்டகாசம்..!
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 May 2021 2:45 PM IST

தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை சிறிதளவும் மதிக்காமல், 25க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் கூட்டமாக வந்து, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் படத்தை வைத்து, அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக இடைவெளிதான் கொரோனோ பரவலுக்கான முக்கிய காரணம் என்றும் கொரோனோ பரவாமல் அந்த சங்கிலியை உடைக்க ஊரடங்கு மட்டுமே கொரோனோ பரவலை தடுக்க வழி என்று தொற்று பரவலை குறைக்க, தளர்வில்லா ஊரடங்கு, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தளர்வில்லா ஊரடங்கின் முதல் நாளான நேற்று காலை, 25'க்கும் மேற்பட்ட தி.மு.க'வினர், சமூக இடைவெளி இன்றி கூட்டமாக, பெருங்குடி மண்டல அலுவலகம் வந்தனர்.அலுவலக கூட்ட அறையில், முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கோஷமிட்டனர். பின், பல அறைகளை சுற்றி வந்த அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதில், சிலர் முக கவசம் அணியவில்லை.முதல்வரின் உத்தரவை மதிக்காமல், முழு ஊரடங்கு காலத்தில், தி.மு.க'வினர் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்தது, மண்டல அலுவலக ஊழியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது, ஊரடங்கு பிறப்பித்த முதல் நாளில், மண்டல அலுவலகத்தில் முதல்வர் படம் மாட்டுவது அவசியமா? தி.மு.க., ஆட்சியில், முதல்வரின் உத்தரவை, அவரது கட்சியினரே மதிக்காமல், கூட்டமாக வந்து அட்டகாசம் செய்வது நல்ல உதாரணம் அல்ல. இவர்கள் மீது, காவல்துறை வழக்கு பதிய வேண்டும். கட்சி தலைமையும், தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் கட்சியினர் இனி பொறுப்புடன் நடந்துகொள்வர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source - தினமலர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News