ஸ்டாலினுக்கு எதிராக சுப்ரமணியன் ஸ்வாமி கடிதம்..! அடுத்தது என்ன?

கடந்த 1991 ஆம் ஆண்டு நமது நாட்டின் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சம்மந்தப்பட்ட ஏழு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு இருக்கையில் சில வருடங்களாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அந்த ஏழு பேரை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு திரு. மு.க. ஸ்டாலின் அந்த கொலையில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்ய கோரி திரு. ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க-வின் எம்.பி. சுப்ரமணியன் ஸ்வாமி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறுகையில், ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்கள் 30 வருடங்களாக துன்பத்தையும், வேதனையும் அனுபவித்து விட்டனர் எனவே அவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார் திரு. ஸ்டாலின். எனவே இதன் மூலம் இந்திய மண்ணில் இந்தியாவின் முன்னாள் பிரதமரின் உயிரை பரித்த ஏழு தீவிரவாதிகளுக்கான தண்டனை 30 ஆண்டு சிறைவாசத்தோடு முடிந்துவிடுகிறதா என்று திரு. ஸ்வாமி கேள்வி எழுப்பிருந்தார். ஒரு பிரதமருடைய உயிரின் மதிப்பு அந்த தீவிரவாதிகள் சில ஆண்டுகாலம் அனுபவித்த சிறைவாசத்தோடு ஒப்பிடுவது எவ்வாறு நியாயமாக இருக்கும் என்றும் அவர் கூறிருந்தார்.
எனவே தாங்கள் இது போன்ற தேசவிரோத பரிந்துரையை நிராகரித்து அந்த ஏழு பேரின் ஆயுள் தண்டனையை தொடர உத்தரவு வழங்குமாறு திரு. சுப்பிரமணியன் ஸ்வாமி நமது நாட்டின் குடிஅரசு தலைவரை கேட்டு கொண்டுள்ளார்.