Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ ஏழ்மையை பார்த்து மத்திய பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி!

மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ ஏழ்மையை பார்த்து மத்திய பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி!
X

ParthasarathyBy : Parthasarathy

  |  27 May 2021 1:31 PM GMT

தற்போது மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. எனினும், அக்கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி தோல்வியை தழுவினார். இதனால் அக்கட்சி தொண்டர்கள் பா.ஜ.க தொண்டர்கள்,அலுவலகம் போன்றவற்றை தாக்கி கலவரத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க தலைவர்கள் தாக்கப்படுவதை அடுத்து 77 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

சல்டோரா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ- வாக மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர் சந்தனா பௌரி. அவருக்கு பாதுகாப்புக்கு வந்த மத்திய பாதுகாப்பு படையினர் அவர்கள் வசிக்கும் ஓட்டு வீட்டை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி கூட இல்லாத அந்த வீட்டில் வசிக்கும் இவரை கண்டு அவர்கள் திகைத்து போனர். அவருடைய கணவர் கூலி வியாபாரி என்பதால் வருமானமும் மிக குறைவு. ஆகையால், அந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் அதிகாரிகளுக்கு தங்கும் வசதியோ, சாப்பாடோ வழங்க முடியாத நிலையில் இருந்தார்.


எனினும், அதை பொருட்படுத்தாத அதிகாரிகள் அவர்களுக்கு பண உதவி செய்து, சந்தனா சமைத்த உணவையே அவர்களுடைய குடும்பத்தோடு தினமும் சாப்பிட்டு வருகின்றனர். அரசியல்வாதி என்றாலே ஆடம்பரமான கார்கள், கை நிறைய பணம், சொகுசு வாழ்க்கை என்று இருக்கும் நிலையில், ஒரு கூலித்தொழிலாளியை பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக மக்களுக்கு சேவை செய்ய தயார் படுத்தியுள்ளது. சந்தனாவின் அரசியல் வெற்றி பல ஏழை குடும்த்தில் இருந்து வரவிருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News