Kathir News
Begin typing your search above and press return to search.

அதிர்ச்சியில் தி.மு.க தலைமை - வைரமுத்து-விற்கு அறிவிக்கப்பட்ட விருது மறு பரிசீலனை..!

அதிர்ச்சியில் தி.மு.க தலைமை - வைரமுத்து-விற்கு அறிவிக்கப்பட்ட விருது மறு பரிசீலனை..!
X

ONV விருது பெற்றதற்கு வைரமுத்துவை அழைத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

Mohan RajBy : Mohan Raj

  |  28 May 2021 12:30 PM IST

பாலியல் புகார் தொடர்பாக பலத்த எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு உயரிய இலக்கிய விருது வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் அது குறித்து ONV பண்பாட்டு அகாதமி மறுபரிசீலனை செய்ய உள்ளதாக அறிவிப்பு.

தமிழ் சினிமாவின் பாடலாசியர் வைரமுத்து'விற்கு கேரள அரசின் உயரிய விருதான ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மலையாள திரையுலகில் சலசலப்பு எழுந்தது. குறிப்பாக நடிகை பார்வதி, தனது டிவிட்டர் பதிவில் "ஒ.என்.வி ஐயா எங்களுடைய பெருமை. ஒரு கவிஞராக, பாடலாசிரியராக அவர் வழங்கிய பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அது நமது கலாசாரத்தை எவ்வாறு வளர்த்தது, அவரது உடல் உழைப்பால் நமது இதயமும் மனதும் பயனடைந்தன. பாலியல் தாக்குதல் குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரில் அத்தகைய விருதை வழங்குவது மிகவும் அவமானத்துக்குரியது" என்று குறிப்பிட்டு இருந்தார்.



இதற்கு முன்பு #MeToo சர்ச்சையின் போது வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் பாலியல் புகார் எழுந்த வைரமுத்து-விற்கு அறிவித்த விருதை மறு ஆய்வு செய்ய உள்ளதாகக் கேரளாவைச் சேர்ந்த ஓ.என்.வி கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News