'விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அம்மா ஆட்சியை போல் செயல்படுங்கள்' : ஓ.பி.எஸ் கொடுக்கும் ஐடியா..!
By : Parthasarathy
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிமாகி உள்ள நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஸ்டாலினுக்கு யோசனை ஒன்றை கடிதம் மூலமாக ஓ.பி.எஸ் கூறினார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் "கொரோனா காரணமாக ஊரடங்கு போடபட்டதால் மக்களால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி தவிக்கின்றனர். எனவே அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது. இந்த சமயத்தில் அத்தியாசிய பொருளின் உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரும் உச்ச்த்தை எட்டியுள்ளது. கொரோனாவின் தாக்கம் சென்ற ஆண்டு முதல் இருந்தாலும் பொருட்களின் விலை இந்த மாதம் தான் உயர்ந்துள்ளது என்பது மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் விலைவாசி உயர்வுக்கு காரணம் அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதும், பதுக்கப்படுவதும். மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் வெளிச்சந்தையில் விற்க படும் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் "விலை நிறுத்தல் நிதி அதாவது Price Stabilisation Fund" என்ற ஒன்றை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தார்.
எனவே விலைவாசி உயர்வுக்கு முக்கியமான காரணங்களாக கடத்தலையும், பதுக்களையும் தடுத்து, விலை நிறுத்தல் நிதியை ஏற்படுத்தி இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று ஸ்டாலினிடம் ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கும் பொழுது "விலைவாசி உயர்விற்கு முக்கிய காரணமாக விளங்கும் கடத்தலையும் பதுக்கலையும் தடுத்து, தேவைப்பட்டால் விலைநிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறினார்.