Kathir News
Begin typing your search above and press return to search.

மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்தாரா தி.மு.க மூத்த அமைச்சர்? அதிர்ச்சி தகவல்!

மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்தாரா தி.மு.க மூத்த அமைச்சர்? அதிர்ச்சி தகவல்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Jun 2021 12:45 PM IST

நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து தனது 'கடமையை' ஆரம்பித்துள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மணல் மாஃபியா ஒருவரை வீட்டிற்கு அழைத்து தனது மகனுடன் சேர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செய்துள்ளார் அந்த மணல் வியாபாரி புதுக்கோட்டையை சேர்ந்த கரிகாலன். இவர் வாயிலாக மணல் குவாரிகளை நடத்த, மூன்று நிறுவனங்கள் ரகசியமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன என தகவல்கள் வந்துள்ளன.

பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும் நீர்வளத்துறை மூலமாக மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. மறுபுறம் மணலுக்கு மாற்றாக 'எம் - சாண்ட்' விற்பனையை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் மணல் குவாரிகளை இயக்குவதற்கு அவசர அவசரமாக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிலேயே, இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் அமைச்சருக்கும், அவரது மகனுக்கும் நெருக்கமானவர்கள் என்கிறார்கள் விவரமறிந்த வட்டத்தினர். இவர்கள் மூவருக்கும் மணல் அள்ள, மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் மணலை அள்ள நிறுனங்களை தயார் செய்த அமைச்சர் துரைமுருகன் அவர்களின் அவரசரத்தை உடன்பிறப்புகளே ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.

Source - ஏசியாநெட் நியூஸ் தமிழ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News