வெடிக்கும் முரசொலி சர்ச்சை.. இந்து மக்கள் கட்சி அதிரடி புகார்..!
By : Parthasarathy
முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையை அனைத்து நூலகங்களும் வாங்கிட வேண்டும் என்ற அரசாணையை நூலக அதிகாரிகளுக்கு வழங்கிக்பட்டது. இதற்கு பலரிடம் எதிர்ப்பு வந்த நிலையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் இந்த அரசாணையை திரும்ப பெறக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
அர்ஜுன் சம்பத் எழுதியுள்ள கண்டன அறிக்கையில் "திமுக வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் திமுக வின் ஆதரவு நாளேடான தினகரன் பத்திரிகையை அனைத்து நூலகங்களிலும் வாங்கிட வேண்டும் என்ற அரசாணை நூலக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான பணத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் பிடித்தம் செய்திட வேண்டும். அந்த பிடித்தம் செய்த பணத்தை முரசொலி அறக்கட்டளைக்கு அனுப்பிவைக்கவும் அரசாணை அனுப்பப்படுகிறது. அரசு எந்திரத்தை, மக்கள் வரிப்பணத்தை ஒரு அரசியல் கட்சியின் நாளேட்டிற்கு சந்தா செலுத்துவதற்கு பயன்படுத்துவது அதிகார துஷ்ப்ரயோகம். இத்தகைய அதிகார துஷ்ப்ரயோகத்தை செய்கின்ற ஸ்டாலின் அரசாங்கத்திற்கும், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த கொரோனா காலத்தில் மக்களின் வரிப்பணம் தி.மு.க வின் முரசொலி நாளேட்டிற்கு செல்வது எந்த வகையில் நியாயம். எனவே மு.க ஸ்டாலின் இந்த அறிக்கையை, அரசாணையை திரும்ப பெற வேண்டும். மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிக்காமல் உடனடியாக இதை மேற்கொள்ளும்படி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படுகிறது." என்று அந்த மனுவில் கூறி இருந்தது.