Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வு: தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர் - தாக்கும் எல்.முருகன்!

நீட் தேர்வு: தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர் - தாக்கும் எல்.முருகன்!

Mohan RajBy : Mohan Raj

  |  9 Jun 2021 5:30 AM GMT

நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க'வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரம் தொடர்பாக தி.மு.க'வின் செயல்பாடுகளை குறித்து அறிகை விடுத்துள்ள அவர் கூறியதாவது, "மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியில் இருந்த 2010ம் ஆண்டு தான் அதுவும் தி.மு.க'வைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான், நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது காங்கிரஸ் தி.மு.க அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு ஜூவை 18ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது இந்த தீர்ப்பை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி மேல்முறையீடு செய்தது இதே தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தான் நிமுக-காங்கிரஸ் கூட்டணியின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

2017-ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் ஆளும் கட்சியாக இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க'வும், காங்கிரஸும் எதிர்க்கட்சியாக அதை நடுமையாக எதிர்த்தன தி.மு.க தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதிகளை அளித்தார். தி.மு.க'வின் தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தனர். இத்நிலையில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க'வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், தலைமையில் உயர்நிலை குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். தீட் தேர்வு சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து தி.மு.க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது. இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும்.

2010-ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன அதன் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் உச்சநீதிமன்றமும் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகுதான் நீட் தேர்வு அவசியம் என தீர்ப்பு வழங்கியது. அதன் பின் முந்தைய அ.தி.மு.க அரகம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக கிராமப்புற ஏழை எளிய மக்கள், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வின் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்வியில் சோ முந்தைய அரசு துணை புரிந்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதனை தடுப்பதற்கு தி.மு.க'வும். அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முயல்கின்றார். இது தான் ஏழை எனிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மீது காட்டும் பரிவா?

இந்த நிலையில் மு க ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ள ஆணையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர நீட் தேர்வை பற்றி எந்த புதிய விஷயத்தையும் கூற முடியாது. முழுக்க முழுக்க காலத்தை கடத்துவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட ஒரு ஆணைய்மாக ஏ.கேராஜன் ஆணையம் செயல்படப் போகிறது. எனவே தான் முகஸ்டாலின் இந்த ஆணையத்தை நீட் தேர்வு ரத்து குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறாமல், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறியிருக்கிறார். விம்புக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற செயள், நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே இந்த விவகாரத்தில் தி.மு.க அரசு அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தேவையின்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை கலைத்துவிட்டு மாணவர்கள் தேர்விற்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தி.மு.க அரசை தமிழக பாஜக வலியுறுத்துகிறது" என அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News