இதை தவிர்த்து பிற பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் : மத்திய வேளாண் துறை அமைச்சர்!
By : Parthasarathy
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். அரசு அவர்களை அழைத்து பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர்த்து மற்றவை குறித்து பேச அரசு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மக்களை பாதித்து உள்ள நிலையிலும் சில விவசாயிகள் தொடர்ந்து அந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். மத்திய அரசு இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று பல முறை குறியும் சில குறிப்பிட்ட விவசாயிகளின் சங்கம் போராடி வருகிறது.
இந்த நிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது "விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி வருகிறது. புதிய வேளாண் மசோதாக்களை திரும்பபெறும் கோரிக்கையை தவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. மற்ற பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்வைக்கலாம். மத்திய பிரதேச அரசு கொரோனா சூழலை சரியாக கையாளுகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாற்றப்படுவார் என்று வெளியாகும் தகவல் உண்மை இல்லை." என்று அவர் கூறினார்.