Begin typing your search above and press return to search.
கூடுகிறது சட்டசபை? ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.!

By :
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் தி.மு.க வெற்றி பெற்று பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்தது. முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழகத்தின் கவர்னர் பன்வரிலால் ப்ரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்வாறு இருக்கையில் இன்று முதல்வர் ஸ்டாலின், கவர்னர் மேதகு பன்வரிலால் ப்ரோஹித்தை கவர்னர் மாளிகையில் சந்தித்தார். ஸ்டாலினை வரவேற்ற கவர்னர் ஒரு புத்தகத்தை பரிசளித்தார். அதன் பின்பு ஸ்டாலினும் கவர்னருக்கு புத்தகம் ஒன்றை வழங்கினார். இதனை தொடர்ந்து ஜூன் 21 ஆம் தேதி கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைத்து உரையாற்றுமாறு அழைப்பு விடுத்தார். மற்றும் சட்டசபையில் இயற்றவுள்ள உரை குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story