"இனிதான் ஆலோசனையே நடத்தனும்" - கம்பி, சிமென்ட் விலையேற்றம் குறித்து தமிழக அமைச்சர்!

சிமென்ட், கம்பி விலையேற்றம் குறித்து தமிழக அரசு இனிதான் ஆலோசனை செய்ய போகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தொழில் மற்றும் தமிழ் பண்பாட்டுதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, "மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டு வர தொழில் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் துவங்க அளிக்கப்படும் அதே சலுகைகளை தென்னக பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் துவங்கினாலும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது" என்றார்.
அதனை தொடர்ந்து சிமென்ட், கம்பி விலையேற்றத்திற்கு விளக்கமளித்த அவர் கூறியதாவது, "ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசித்து சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
அதாவது கடந்த ஒரு மாத காலமாக விலை ஏற்றம் இருக்கும் நிலையில் அதனை கண்டுகொள்ளாத தமிழக அரசு, தற்பொழுது மக்களிடத்தில் அதன் தாக்கம் ஏற்படும் பொழுது அதனை பற்றி ஆலோசனை நடத்துவதாக கூறியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.