'நிதி வேண்டும் என்றால் டாஸ்மாக் திறக்க வேண்டுமா?' - ஸ்டாலினுக்கு ஜான் பாண்டியன் சரமாரி கேள்வி!

"அரசுக்கு நிதி வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டுமா?" என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த அதிமுக ஆட்சியின்போது தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்து வந்தது. அப்போது டாஸ்மாக்குக்கு எதிரான கொடுத்த வாக்குறுதிகளும், நடத்திய நாடகங்களும் மறவாதீர்கள். மீண்டும் நினைவு படுத்துகிறேன். மக்களைப் பற்றி சிந்திக்காமல் மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டதை மறவாதீர்கள்.
தற்போது தி.மு.க அரசு தமிழக மக்கள் நலனுக்கு எதிராக டாஸ்மாக் என்பது எந்த வகையில் தமிழகத்தில் தினசரி குறைந்த தொற்று பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவ அதிகரிக்க வழிவகை செய்யும் கடைகளில் கிடைக்கும் மிக குறைந்த வருமானம் பறிபோய்விடும். தாங்கள் வழங்கிய நிவாரண நிதி ரூபாய் 2000 வழங்கிவிட்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிப்பது இது எந்த வகையில் நியாயம்?
அரசுக்கு நிதி வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டுமா? வேறு ஏதாவது நிறுவனங்களை திறக்கலாம். டாஸ்மாக் திறந்தால் தற்போதைய விட இன்னும் குடும்பங்களின் வறுமை அதிகமாகும், அப்படிப்பட்ட முடிவை அரசு கைவிட வேண்டும். வருவாயை மட்டும் நோக்கமாகக்கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முயல்வது கண்டிக்கத்தக்கது. அதனை போல ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், மது ஆலைகளை மூட தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என அவரது அறிக்கையில் குறிப்ப்பிட்டுள்ளார்.