Kathir News
Begin typing your search above and press return to search.

யூ ட்யூப் மதன் விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ மகனுடன் தொடர்பா?

யூ ட்யூப் மதன் விவகாரம் - தி.மு.க எம்.எல்.ஏ மகனுடன் தொடர்பா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2021 10:25 AM GMT

18 வயது நிரம்பியிராத குழந்தைகள் இணயத்தில் சுதந்திரமாக உலா வருவதனால் என்னவெல்லாம் ஆபத்து நிகழும், பிஞ்சு வளரும் உள்ளங்கள் என்ன எந்தளவிற்கு வக்கிரம் நிறைந்த வன்மமனதாக மாறும் என்பதற்கு சரியான உதாரணமாக யூ ட்யூப் சேனல் மதன் விவகாரம் உருவெடுத்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக சரியான முறையில் பள்ளிகள் இயங்காததால் தமிழகத்தில் பல பதின்ம வயது மாணவர்கள் தங்கள் கல்வியை ஆன்லைன் மூலம் கற்க வேண்டிய சூழல் உருவாகியது. வீடியோ கால்கள் மூலம் வகுப்பறைகள், வாட்ஸ் அப் மூலம் செய்முறைகள், யூ ட்யூப் மூலம் ரெபஃரன்ஸ் வீடியோக்கள் என பருவ வயது பிள்ளைகள் இணையத்தில் பெருவாரியான பொழுதை சமீப காலமாக கழித்து வருகின்றனர். பெற்றோர்களும் சரி பிள்ளைகள் ஊர் சுற்றி வராமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து அடைபட்டு கிடக்கின்றனரே என அலட்சியமாக விட்டு விடுவதால் ஏற்படும் ஆபத்து எந்த அளவிற்கு கொடியது என யூ ட்யூப் சேனல் மதன் விவகாரம் நிரூபித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மத்திய அரசு பப்ஜி விளையாட்டை தடை செய்தது. இதன் காரணமாக சதா சர்வகாலமும் பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்த அதன் அடிமை சிறார்களை குறிவைத்து யூ ட்யூப் சேனல் துவங்கினார் மதன். அதாவது பப்ஜி விளையாட்டு அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்ய இயலாது ஆனால் மதன் யு ட்யூப் பக்கத்தில் அந்த விளையாட்டில் பங்குகொள்ள இயலும். மேலும் இந்த முறையில் விளையாடுவது மூலம் சிறார்கள் மற்றும் சிறுமிகள் தங்களை முகத்தை காட்டி விளையாட வேண்டும் என்று அவசியமில்லை மாறாக தங்கள் நினைக்கும் நேரத்தில், நினைத்த வார்த்தைகளை சரளமாக (பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளை) உபயோகித்துகொண்டு முகம் தெரியாத இணைய நண்பர்களை சேர்த்துகொண்டு விளையாட முடியும்.

அப்படி விளையாட்டின் ஒருபடி மேலே சென்று விளையாட்டில் பங்குபெறும் பதின்ம வயது சிறுவர், சிறுமியர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் (சில சமயங்களில் அதிகபட்சமாக வாட்ஸ்அப் எண்களை கூட பரிமாறிகொண்டு) தங்கள் இஷ்டத்திற்கேற்ப காம பேச்சுக்களை வளர்த்துக்கொண்டும், நிர்வாண நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால்களை பரிமாறிகொண்டும், ஏன் சில நேரங்களில் உட்சபட்சமாக நேரில் சந்தித்து தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்ளவும் வழி வகுக்கின்றன.

இந்த முறையைதான் யூ ட்யூப் மதன் கையாண்டுள்ளான். தனது யூ ட்யூப் பக்கத்தில் பல மணி நேரங்கள் பப்ஜி கேம் விளையாடி ஆன்லை வரும் இளசுகளை இழுக்க வேண்டியது. பெரும்பாலும் விளையாடும் போது அதீத கெட்ட வார்த்தைகள் மற்றும் அந்தரங்க உறுப்பு பற்றிய விஷயங்கள் மற்றும் கலவி சம்மந்தப்பட்ட விஷயங்களை பேசிக்கொண்டே விளையாடுவதால், பதின்ம வயது சிறார்கள் மத்தியில் ஆர்வம் தலைக்கேறி அது போதையாகி விடுகிறது. உதாரணமாக இருபது நபர்கள் சரிபாதி ஆண்கள், பெண்களாக ஒரே நேரத்தில் இணையத்தில் விளையாடும்போது இவ்வாறாக கெட்ட வார்த்தைகளையும், கலவி சம்மந்தப்பட்ட விஷயங்களையும் பேசி விளையாடுவதால் அந்த இணைய இணைப்பை துண்டிக்க மனமில்லாமல் பருவ வயது மனது அப்படியே தொடர்ந்து விளையாட தூண்டுகினது. போதாக்குறைக்கு தங்கள் நண்பர்களையும் இதற்கு இணங்க சொல்லி வற்புறுத்த தூண்டுகிறது.


இது பெரும்பாலும் நடந்தேறும் வேளையில் வீட்டில் பெற்றோர்கள் "பாவம் பையன்/பொண்ணு படிக்கிறாங்க ஆன்லைன்'ல" என மனதில் நினைத்துகொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவது இந்த பருவ வயதினருக்கு இன்னும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

மேலும் இந்த விளையாட்டின் போது மதனுக்கு பே டிஎம், கூகுள் பே, யு.பி.ஐ போன்ற பணப்பரிவர்த்தனை வழிகளின் மூலம் பணம் செலுத்தும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளது. சில பணக்கார பசங்க ஆன்லைன் விளையாட்டு நேரத்தின் போது 1000, 5000, 10000 என மதனுக்கு பணம் அனுப்புவார்கள். அந்த நேரத்தில் மதன் அவர்களை பற்றி மற்றவர்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசுவதால் ஏற்படும் புகழ் போதை வேறு இவர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இதில் குறிப்பாக திருச்சியை சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஒருவர் மதனின் இந்த விளையாட்டில் அடிக்கடி பங்கு பெறுவதாகவும், 10,000 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியதாகவும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் அந்த தி.மு.க எம்.எல்.ஏ மகனும் மதனும் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் தி.மு.க எம்.எல்.ஏ மகன் நிர்மல் ரெட்டி என்பவர் மதனிடம் "எங்க அப்பா எனக்கு எல்லாம் செய்ய சொல்லி தருவார், அவரே எல்லாத்தையும் கத்துக்க சொல்வார்" என பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன், உடனே அவர்களை இன்ஸ்டா பக்கத்திற்கு வரச்சொல்லி ஆடையில்லாமல் இரவில் வீடியோ சாட் செய்யலாம் என அழைக்கும் வீடியோக்களும் இணையத்தில உலா வருகின்றன.

மேலும் இப்படி ஜாலியாக பேசி விளையாடினாலே நல்ல வருமானம் கிடைக்கும் என்று இவரை பின்பற்றி மேலும் சில சிறுவர்களும் யூடியூப் சேனலை தொடங்கி ஆபாசமாக பேசிவருவதாக குற்றம் சாட்டுகின்றனர் பல யூடியூபர்கள்.

இப்படி யூ ட்யூப் மதன் ஆன்லைன் விளையாட்டின் போது கெட்ட வார்த்தை பேசிய வீடியோக்கள், பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிய வீடியோக்கள், மற்ற பெண்களுடன் தனியாக ஆபாசமாக பேசிய வீடியோக்கள் என அனைத்தும் தற்பொழுது சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மதன் யூடியூப் சேனல் மீது காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநில குழந்தைகள் உரிமைகள் ஆனையமும் புகாரை ஏற்று விசாரணையை தொடங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News