Kathir News
Begin typing your search above and press return to search.

"தி.மு.க-வை எதிர்த்து போராட வாருங்கள், உங்கள் தலைமையில் நான் போராடுகிறேன்" - கனிமொழிக்கு நாராயணன் அழைப்பு!

தி.மு.க-வை எதிர்த்து போராட வாருங்கள், உங்கள் தலைமையில் நான் போராடுகிறேன் - கனிமொழிக்கு நாராயணன் அழைப்பு!
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Jun 2021 8:36 AM IST

"குடி கெடுக்கும் தி.மு.க-வை எதிர்த்து போராட வாருங்கள், உங்கள் தலைமையில் நான் போராடுகிறேன்" என தி.மு.க எம்.பி கனிமொழியை போராட அழைத்துள்ளார் பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதி.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அனைதுது தரப்பினரும் எதிர்த்து வருகின்றர். குறிப்பாக தமிழக பா.ஜ.க முழு வீச்சில் எதிர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க'வினர் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "தற்போதைய தி.மு.க ஆட்சியில், கொரோனா ஊரடங்கில் தளர்வாக டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதால், 'நாளை இதே போன்ற ஒரு போராட்டத்தை தமிழக அரசை எதிர்த்து நடத்துங்கள். உங்கள் தலைமையில் நான் பங்கு பெறுகிறேன். தலைப்பு உங்களுடையதே!'' என்று கடுமையாக கனிமொழியை விமர்சனம் செய்திருக்கிறார் நாராயணன் திருப்பதி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News