டாஸ்மாக் வாசலில் குவாட்டர் பாட்டிலை சூடம் ஏற்றி வழிபட்ட உடன்பிறப்பு!
By : Kathir Webdesk
குவாட்டர் பாட்டிலுக்கு சூடம் ஏற்றி, முத்தம் குடுத்து, வணங்கிய தி.மு.க உடன்பிறப்பால் நேற்று சலசலப்பு ஏற்பட்டது.
கொரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் மதுபானகடை மூடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு கொரோனோ எண்ணிக்கை கணிசமாக குறையும் முன்னரே தளர்வுகளை அளித்தது. அந்த தளர்வுகளில் டாஸ்மாக் மதுபானகடையும் ஒன்று. இந்த விவகாரத்தில் கட்சிகள் வித்தியாசமின்றி அனைவரும் எதிர்த்தனர். தமிழகம் இந்திய அளவில் கொரோனோ எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பதால் தற்பொழுது டாஸ்மாக் திறப்பது ஆபத்தானது என நிபுணர்களும், மருத்துவர்களும், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களும் எதிர்த்து வந்த நிலையில் அதனை பொருட்படுத்தாது தி.மு.க தலைமையிலான அரசு டாஸ்மாக் மதுபானகடைகளை நேற்று முதல் திறந்துள்ளது.
இதனால் திறக்கப்பட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் 2 கிலோமீட்டர் வரை வரிசையில் நின்று மதுபான பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் நின்றனர் இதனால் நேற்றைய டாஸ்மாக் மது விற்பனை ஒரே நாளில் 165 கோடியை எட்டியது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 50 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தன.
கடந்த ஆண்டு கருப்பு கொடி, சட்டையுடன் போராட்டத்தில் நின்ற தி.மு.க-வினர் இந்ந ஆண்டு டாஸ்மாக் கடை வாசலில் பாட்டிலை வாங்கி வைத்து சூடம் ஏற்றி வணங்கி பாட்டிலை முத்தமிட்டு மதுபானகடை திறப்பை வரவேற்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் நேற்று வைரலாகியது.