Kathir News
Begin typing your search above and press return to search.

'கல்வி மாநில உரிமை' என போர்க்கொடி தூக்கும் சூர்யா - மாணவர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியா?

கல்வி மாநில உரிமை என போர்க்கொடி தூக்கும் சூர்யா - மாணவர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Jun 2021 2:30 PM GMT

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை தூண்டும் வகையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம் புகார்களை அளிக்க நடிகர் சூர்யா அறிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு 'கல்வியே ஆயுதம்'. எழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழவில், சுருதியைத் தீர்மானிக்க 'ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது,

எனிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அரீதி 'நீட் நுழைவுத்தேர்வு' வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்களாக்கான ஏழை மாணவர்களின் களவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காலத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை:

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு, 'நீட் தேர்வின்' பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரகப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் ஃபவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய, 'நீட் நேர்னீன்' பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும். மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி எகே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம், neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்லி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தர தீர்வு "கல்வி மாநில உரிமை" என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என அறிக்கை விடுத்துள்ளார்.

12 ஆண்டுகள் படித்த மாணவர்கள் என்ற காலணத்தினாலேயே நுழைவு தேர்வு இல்லாமல் உயர்கல்வி கற்க வேண்டும் என சூர்யா கூறுவது கல்வி பற்றிய அடிப்படை அறிவு இல்லாததை காட்டுகிறது. திரையுலகில் வேண்டுமானால் நடிகர், இயக்குனர் அவதாரம் எடுக்கலாம், இசையமைப்பாளர் கதாநாயகனாக மாறலாம் ஆனால் படிப்பு என்பது திறமையானவர்களை தரம்பிரித்து அவர்தம் திறமைக்கு ஏற்ப துறைகளை தேர்ந்தெடுக்கும் முறையே ஆகும். இதில் நுழைவுதேர்வு ஓர் அளவுகோல் கருவியே இதனை 'நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை' என சூர்யா குறிப்பிடுவது சூர்யா'வின் மாணவர்கள் மீதான ஆபத்தான பார்வையை காட்டுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News