Kathir News
Begin typing your search above and press return to search.

அறவழியில் போராடினால் கைது செய்வீர்களா? தி.மு.க-வை வறுத்தெடுக்கும் சீமான்!

அறவழியில் போராடினால் கைது செய்வீர்களா? தி.மு.க-வை வறுத்தெடுக்கும் சீமான்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Jun 2021 7:45 AM IST

மதுபானக் கடைகளை மூடக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய நாம் தமிழர் கட்சியினர் 120 பேர் மீது கடுமையான சட்டப்பிரிவுகள் போட்டு வழக்கு தொடுத்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள இப்பேரிடர் காலத்தில் மதுபானக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி வெற்றிக்குமரன் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறவழியில் போராடிய பெண்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் 120 பேர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இத்தகைய அடக்குமுறைகள் மூலம் மண்ணுக்கும் மக்களுக்குமானப் போராட்டக் களத்தில் ஓங்கி ஒலிக்கும் நாம் தமிழர் உறவுகளின் குரலைக் முடக்கிவிடலாம் எனும் தி.மு.க அரசின் வெறுங்கனவு ஒருபோதும் நிறைவேறாது" என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News