'ஒன்றிய' அரசிடம் கருணாநிதிக்கு "பாரத ரத்னா" கேட்கும் வினோத தி.மு.க!
By : Mohan Raj
'ஓன்றிய அரசு' என மத்திய அரசை அழைத்துவிட்டு முன்னாள் தி.மு.க தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வேண்டும் என வினோதமாக கேட்கிறது தி.மு.க.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. உறுப்பினர் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு) பேசியதாவது, "தமிழர்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து கொண்ட சமூக நீதி காவலராக விளங்கிய கருணாநிதிக்கு இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஒன்றிய அரசு' என்று சொல்வதை, ஏதோ சமூகக்குற்றம் போல யாரும் நினைக்கவேண்டாம். அப்படிசிலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ, அதைத் தான் நாங்கள் சொல்கிறோம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, "இந்தியா. அதாவது பாரதம்-மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை" என்றார்.
தங்கள் இஷ்டத்திற்கு மத்திய அரசை ஒன்றியம் என அழைக்க விரும்புவர்கள் கருணாநிதிக்கு விருது என வந்தவுடன் "பாரத ரத்னா" வேண்டும் என வினோதமாக கேட்கின்றனர்.