Begin typing your search above and press return to search.
நீட் ரத்து ரகசியம் தெரிந்த உதயநிதி, ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மனுவுடன் மன்றாடிய பரிதாபம்!
By : Mohan Raj
நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் தெரிந்த உதயநிதி நேற்று நீட் தேர்வை ரத்து செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனிடம் மனுவை அளித்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி நீட் தேர்வு குறித்து பேசும்போது, "நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்ற ரகசியம் எங்களுக்கு தெரியும், எல்லோரும் கேட்கிறார்கள் எப்படி ரத்து செய்வது என்று? நான் சொல்கிறேன், கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்யலாம்" என பிரச்சாரம் செய்தார்.
அவர் கூறியபடியே மக்கள வாக்களித்து தி.மு.க ஆட்சியை பிடித்தது. ஆனால் கிட்டதட்ட இரு மாதங்கள் ஆகியும் நீட் தேர்வு குறித்த ஒரு முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் நேற்று நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனிடம் மனுவை அளித்தார் உதயநிதி.
Next Story