"குடிக்க வரவங்கள கட்டுப்படுத்தலாம், கோவிலுக்கு வரவங்கள கட்டுப்படுத்த முடியுமா?" - தி.மு.க அமைச்சரின் அடடே விளக்கம்!

டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க வருபவர்களை கட்டுப்படுத்தலாம், ஆனால் பக்தியில் கோவிலுக்கு வருபவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற புதிய விளக்கத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது, "திருக்கோவிலில் பக்கதர்கள் வருவதற்கு தான் அனுமதி இல்லை. ஆனால் பூசாரிகள் தினசரி பூஜை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை" என்றார்.
மதுபானம் மூலம் கோடிகளில் வருமானம் வருகிறது, ஆனால் கோவில்களில் வருமானம் குறைவு என்பதுதான் அரசின் காரணம், ஆனால் ஒரு அமைச்சர் இந்த உண்மை காரணத்தை கூறாமல் பூசி மொழுகுவதாக மக்கள் கருதுகின்றனர்.