Kathir News
Begin typing your search above and press return to search.

கேரள மகளிர் ஆணைய தலைவரின் திமிர் பேச்சு : வலுக்கும் எதிர்ப்புகள்!

கேரள மகளிர் ஆணைய தலைவரின் திமிர் பேச்சு : வலுக்கும் எதிர்ப்புகள்!

ParthasarathyBy : Parthasarathy

  |  25 Jun 2021 10:21 AM GMT

கேரளாவின் மகளிர் ஆணைய தலைவியாக பொறுப்பு வகிப்பவர் எம்.சி. ஜோஸ்பின். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்கும்போது, குடுப்பதில் பாதிக்கப்பட்ட பெண் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதற்கு எம்.சி. ஜோஸ்பின் "குடும்ப வன்முறை குறித்து போலீசில் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றால் அந்த நரகத்தை நீ அனுபவித்தாக வேண்டும்." என்ற பேச்சு பெரும் சர்ச்சையாகி வருகிறது.


மலையாள செய்தி சேனல் ஒன்றில் தொலைபேசி மூலமாக பாதிக்கப்பட்ட பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் கேரள மகளிர் ஆணைய தலைவி ஜோஸ்பின். அப்போது பாதிக்கப்பட்ட பெண் தயக்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'கணவரும், மாமியாரும் தன்னை துன்புறுத்துகிறார்கள்' என்று வருத்தமாக பேசி உள்ளார். அந்த சமயத்தில் அந்த பெண்ணிடம் கேள்வி கேட்ட ஜோஸ்பின் 'இது குறித்து நீ யாரிடமாவது சொல்லி உள்ளாயா?' என்று கேட்டார். அதற்கு அந்த பெண் இல்லை என்று பதில் அளித்தார். இந்த பதிலை கேட்டவுடன் ஜோஸ்பின் அப்போது 'நீ அனுபவிக்க வேண்டியவள் தான்' என்று பதில் அளித்துள்ளார். இவர் சொன்ன இந்த பதில் அந்த தொலைக்காட்சியின் நேரலையில் பதிவாகி உள்ளது.

ஜோஸ்பின் அளித்த இந்த பதில் மக்கள் மற்றும் காட்சிகள் இடையே பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜோஸ்பின் பதவி விலக வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.கேரள மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி. ஜோசபின் இந்த பேச்சுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News