ஜெயராஜ் - பெனிக்ஸ் இறப்புக்கு ஓடோடிய கனிமொழி, முருகேசன் மரணத்தில் மெளனம் ஏன்?

By : Mohan Raj
ஜெயராஜ் - பெனிக்ஸ்க்கு ஓடோடி உதவிகள் கேட்ட கனிமொழி வியாபாரி முருகேசன் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதற்கு ஒரு ட்விட் போட்டு தனது பங்கை முடித்துக்கொண்டார்.
காவலர்கள் தாக்குதலால் உயிரிழந்த ஜெயராஜ் - பென்னிக்ஸின் முதலாண்டு நினைவு நாளில் பொது வெளியில் மீண்டும் அதே போன்று ஓர் தாக்குதல் நடந்தது. சேலம் மாவட்டம் இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் வியாபாரியான முருகேசன் ஊரடங்கு விதிகளை மீறி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, இடையப்பட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் சிக்கியதில், ஏத்தாப்பூர் காவல் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை ஆவேசமாக தாக்கியதால் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய செய்தது. மது குடித்துவிட்டு வாகனத்தில் வருவது கொலை செய்யும் அளவிற்கு குற்றமில்லையே என பொதுமக்களும் நியாபகம் கேட்டனர்.
ஆனால் கடந்த ஆண்டு இதே தினத்தில் தூத்துக்குடியில் இதுபோன்று காவலர்கள் தாக்கி இறந்துபோன ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவருக்காவும் உடனே ஊரடங்கு என பாராமல் கனிமொழி ஓடி உதவிகள் தேடினார், இதுபோன்ற கொடுமைகள் கூடாது என தனது ட்விட்டர் பக்கத்தில் நிரப்பினார். தான் அணியும் மாஸ்க்க்கில்ட 'ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும்' என வாசங்களை அச்சிட்டு வலம் வந்தார். ஏன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், இதேபோல் காவலர்கள் தாக்கி உயிரிழந்த முருகேசன் விவகாரத்தில் ஒரு ட்விட் மட்டும் செய்து தன் இரங்கலை வெளிப்படுத்திவிட்டு அமைதியாகி விட்டார்.
"ஏன்? இறந்தவர் தி.மு.க அட்சியில் இறந்த காரணமா? அல்லது இறந்தவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் இல்லை என்ற காரணமா? அல்லது இது தேர்தல் வரும் நேரம் இல்லை என்ற அலட்சியமா?" என மக்களே கேட்கும் அளவிற்கு உள்ளது எம்.பி கனிமொழியின் செயல்பாடுகள்.
