தமிழக அரசு விழாக்களிலும் 'செட் ப்ராப்பர்ட்டி' போல் இடம் பெறும் உதயநிதி - புறக்கணிக்கப்படும் அமைச்சர்கள்!

செட் ப்ராப்பர்ட்டி போல் தி.மு.க சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதியை ஸ்டாலின் எங்கு சென்றாலும் தூக்கி கொண்டு தி.மு.க அமைச்சர்கள் சுற்றுவதால் மக்களிடையே விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முறையாக வென்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்றார் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி. தி.மு.க அமைச்சரவையில் இடம் பெறுவார் என இணைய உடன்பிறப்புகள் கூவி வந்த நிலையில் அமைச்சரவையில் உதயநிதி இடம் பெறவில்லை. ஆனாலும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்களோ இல்லையோ எம்.எல்.ஏ உதயநிதி தவறாமல் 'செட் ப்ராப்பர்ட்டி' போல் ஆஜராகிறார்.
இன்று கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவங்கி வைத்தது என்னவோ சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தான். ஆனால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி உடன் இருந்தார்.
உதயநிதி அமைச்சரவையில் கிடையாது, ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த ஒரு விழா நடந்தாலும் 'செட் ப்ராப்பர்ட்டி' போல் உதயநிதி தென்படுகிறார்.