அமேதி, ரேபரேலியில் பா.ஜ.க அபார வெற்றி - யோகியால் தகர்த்தெறியப்பட்ட காங்கிரஸ் கோட்டைகள்!
By : Kathir Webdesk
உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்ட இத்தேர்தலின் முடிவுகள் நேற்று எண்ணப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா வாத்ரா காந்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்ததால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 75 மாவட்ட பஞ்சாயத்துகளில் 67 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலி பஞ்சாயத்துளை பாரதிய ஜனதா கைப்பற்றி, காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க-வின் ரஞ்சனா செள்த்ரியிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்த்தி சிங் படுதோல்வி அடைந்தார். இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உதவ சமாஜ்வாதி கட்சி இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தக்கூட இல்லை.
அமேதி தொகுதியில் சமாஜ்வாதி கட்சிக்கு உதவ, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்த வில்லை. இருந்தும், பா.ஜ.க-வின் ராஜேஷ் அக்ராஹிர் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 404 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 7 எம்.எல்.ஏ-க்களை வென்றது. அடுத்த வருடத் தேர்தலில் இதுக்கூட மிஞ்சுமா என தற்போது தெரியவில்லை.