"என் உயிர் உள்ளவரை அ.தி.மு.க-வை யாரும் அசைக்க முடியாது" - சசிகலா உருக்கம்!

"என் உயிர் உள்ளவரை அ.தி.மு.க'வை யாரும் அசைக்க முடியாது, விடவும் மாட்டேன்" என தொலைபேசி உரையாடலில் அவேசமாக கூறியுள்ளார் சசிகலா.
சசிகலா இன்று தொலைபேசி வாயிலாக சில தொண்டர்களிடம் பேசினார். அப்போது கோயம்புத்தூர் சேர்ந்த மணிவேல் என்பவர், "2014'ம் ஆண்டில் நீங்களும் அம்மா அவர்களும் சேர்ந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற செய்தீர்கள், அதனை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி என மாற்றி விட்டார் எடப்பாடி, 138 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்ததை 65 ஆக மாற்றி சாதனை படுத்தியுள்ளார் எடப்பாடி. எடப்பாடி பழனிச்சாமி மேலும் ஒரு சாதனையை செய்ய முயற்சி செய்து வருகிறார்கள், அது என்னவென்றால் இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க கட்சியையும் காணாமல் போக வைக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார்கள்" என கூறினார் மணிவேல்.
அதற்கு பதிலளிக்கு விதமாக பேசிய சசிகலா கூறியது, "என் உயிர் உள்ளவரை அந்த வேலையை யாரலையும் செய்ய முடியாது, செய்யவும் நான் விடமாட்டேன். தொண்டர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கும் வரை வெற்றி நமக்கு மட்டும் தான்" என உறுதிபட தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.