"நீட் விவாதத்திற்கு தயார், சூர்யா வர தயாரா?" - தமிழக பா.ஜ.க சவால்!

"நீட் பற்றிய விவாதத்திற்கு தமிழக பா.ஜ.க தயாராக உள்ளது, நடிகர் சூர்யா வர தயாரா?" என தமிழக பா.ஜ.க அழைப்பு விடுத்திருக்கிறது.
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருநாகராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, "நீட்" விவகாரத்தில் தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவும் தி.மு.க விளையாடுகிறது. 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு தேவையில்லாதது. அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை எனவே, அந்த அரசாணையை ரத்து செய்யுமாறு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.
தி.மு.க கூட்டணி கட்சிகள் எவ்வாறு கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்வார்களோ, அவ்வாறே கோர்ட்டிலும் தங்களை இணைத்துக்கொண்டு மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக வரும் 8-ந் தேதிக்குள் மத்திய அரசு தனது கருத்துக்களை பதிவு செய்யும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயும் குழு அரசாணைக்கு எதிரான பா.ஜ.க.வின் வழக்கு கொள்கை ரீதியிலான போராட்டம் அல்ல: சட்டப் பூர்வமான போராட்டம். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி 'நீட்' தேர்வை எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது.
எடுத்த எடுப்பிலேயே கண்ணை மூடிக்கொண்டு ('நீட்', ஒளிப்பதிவு திருத்த சட்ட வரையு விவகாரம் மத் திய அரசை எதிர்ப்பதால் நடிகர் சூர்யாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நடிகர் சூர்யாவுடன் பொது விவாதத்துக்கு பா.ஜ.க. எப்போதும் தயாரா உள்ளது. சூர்யா அதற்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.