'திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்' : தி.மு.க அமைச்சரின் பக்தி மழை!

பெரியாரிசம் பேசி வந்த தி.மு.க'வினர் தற்பொழுது கோவில் கோவிலாக ஏறி வருகின்றனர். முன்பு ஒரு காலத்தில் இறை நம்பிக்கையை ஏசி வந்த தி.மு.க-வினரில் இன்று கோவிலுக்கு போகாத தி.மு.க உடன்பிறப்பை பார்க்க இயலாது. தமிழகம் பெரியார் மண் என கூறி வந்தாலும் அடிக்கடி தமிழகம் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தமிழ் வளர்த்த ஆன்மீக மண் என்பதை அவர்களே அவ்வபோது நிரூபித்து விடுவார்கள்.
அந்த வகையில் திருச்செந்தூரில் தன் மனைவியுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது மனைவியுடன் வந்தார். அவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது, "தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 40 சதவீத கட்டணம் முதல் தவணையாகவும், 35 சதவீத கட்டணம் 2-வது தவணையாகவும் செலுத்துவதற்கான உத்தரவை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்" என தெரிவித்தார்.