கொங்கு மண்டலமே தன் பின்னே இருக்கு என்ற நினைப்பில் சுற்றி வரும் மகேந்திரன்?
By : Mohan Raj
கொங்கு மண்டலமே மகேந்திரன் பின் இருப்பது போன்ற நினைப்பில் "கொங்கு மண்டலத்தை தி.மு.க-வின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம்" என தி.மு.க-வில் சமீபத்தில் இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் மக்கள் நீதி மய்யத்தில் கட்சி சரியில்லை, தலைவர் வழிநடத்தல் சரியில்லை என குறைகளை அடுக்கி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன் நேற்று தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.
பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்காது; கொங்கு மண்டலத்தை தி.மு.க-வின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம், அதுவே என் நோக்கம்" என்றும் கூறினார்.
என்னவோ கொங்கு மண்டலமே மகேந்திரன் பின் நிற்பது போல் அவர் பேசியிருப்பது கொங்கு மண்டலத்தை கூர்ந்து கவனிக்கும் அரசியல் நோக்கர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.