தி.மு.க-வுக்கு பிரச்சாரம் செய்தால் பாடநூல் கழக தலைவர் பதவியா? இந்து முன்னணி சரமாரி கேள்வி!

தமிழ்நாடு பாட நூல் கழக தலைவராக ஐ.லியோனி நியமனம் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டின் பாடநூல் நிறுவனத் தலைவராக ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். பட்டிமன்றத்தில் பேசுகிற தகுதி மட்டுமேகொண்ட ஒருவரை, பாடநூல்கழகத் தலைவராக நியமித்துஇருப்பது வருந்தத்தக்கது. பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ததால் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது.
பட்டிமன்ற மேடைகளிலும், திமுக பிரச்சார மேடைகளிலும் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பெண்களை விமர்சித்துள்ளார். இதுபோன்ற நபர்களை கல்வி தொடர்பான துறைக்கு நியமனம் செய்திருப்பது வேதனையானது.
அவரது நியமனத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.