Kathir News
Begin typing your search above and press return to search.

"மலை நல்லாருக்கியா மலை!" - கேப்டனை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

மலை நல்லாருக்கியா மலை! - கேப்டனை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 July 2021 1:15 PM IST

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தித்தார்.

தே.மு.தி.க தலைவர் மற்றும் பொதுச்செயலாளரான விஜயகாந்த் உடல்நலம் பாதிப்பால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தலின் போதும் பிரசாரம் செய்யாமல் பொது மக்களை மட்டும் சில இடங்களில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அப்போது, கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News