கொங்கு நாட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் - தூக்கம் தொலைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் தூக்கம் தொலைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக கொங்கு மண்டலத்தில் ஆட்களை பிற கட்சிகளில் இருந்து இழுக்கும் பணியை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதல்வர் பதவியை ஸ்டாலின் கைப்பற்றினாலும் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த அளவு தி.மு.க-வால் வெற்றி பெற முடியவில்லை. இந்த தோல்வி முதல்வர் ஸ்டாலினை தூக்கம் தொலைக்க செய்து விட்டது. எப்படியாவது கொங்கு மண்டலத்தை தி.மு.க வசம் கொண்டு வந்து விட வேண்டும் என தவிக்கிறார். இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரனை தி.மு.க-வில் இரு தினங்கள் முன்பு இணைய வைத்தனர்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தி.மு.க-வில் இன்று இணணக்கப்பட்டுள்ளார். இந்த செயல்கள் மூலம் தி.மு.க கொங்கு மண்டலத்தில் எப்படியாவது கால் ஊன்றி அதிக இடங்களை பெற வேண்டும் என்ற முதல்வரின் ஆசையை காட்டுகிறது. மேலும் இன்னும் பல கொங்கு மண்டல பிற கட்சி அரசியல் பிரமுகர்களுக்கு தி.மு.க வலை வீசியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.