Kathir News
Begin typing your search above and press return to search.

"மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள், பா.ஜ.க அப்படியல்ல" - ஆட்டத்தை துவங்கிய அண்ணாமலை!

மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள், பா.ஜ.க அப்படியல்ல - ஆட்டத்தை துவங்கிய அண்ணாமலை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 July 2021 9:30 PM IST

"மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள், பா.ஜ.க அப்படியல்ல" என தி.மு.க'வின் குடும்ப அரசியலை குறிவைத்து ஆட்டத்து துவங்கியிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை தொடர்ந்து, இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து வரும் 16'ம் தேதி தலைவர் பதவியில் பொறுப்பேற்கிறார்.

இன்று கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்டார். கோவையில் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, அவிநாசி தண்டுமாரியம்மன் கோவிலில் அண்ணாமலை சிறப்பு பூஜை செய்து தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழக பா.ஜ.க'வில் இருந்து பல பேருக்கு அகில இந்திய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருபக்கம் இளமையானவர்களும், மற்றொரு பக்கம் அனுபவமுள்ளவர்களும் கட்சிக்குள் இருப்பார்கள். மற்ற கட்சிகளில், குடும்பத்தில் இருப்பவர்களே பொறுப்புக்கு வருவார்கள்.

பா.ஜ.க'வை பொறுத்தவரை மாநிலத் தலைவர் என்ற பொறுப்பு அனைவரையும் இணைத்து அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். நான் தமிழக பா.ஜ.க கட்சியின் தலைவர் அல்ல சேவகன்" என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News