'பாவம் உள்ளே விடுங்கப்பா' - ஜெயலலிதா-விற்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த்!
By : Mohan Raj
"அந்தம்மா பாவம் உள்ளே விடுங்கப்பா" என எம்.ஜி.ஆர் மறைவின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா-விற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா என்னும் நான் என்கிற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்துள்ளார் சசிகலா. அப்போது ஒரு சம்பவத்தை பற்றி நினைவு கூர்ந்த அவர் கூறியதாவது, "'எம்.ஜி.ஆர் மறைந்த தகவலை ஜெயலலிதா அக்காவுக்கு போனில் தொடர்பு கொண்டு சொன்னேன். அக்கா அதிர்ச்சியாகி போனை வைத்து விட்டார். பிறகு நானும் டி.டி.வி.தின்கரனும் போயஸ் கார்டனுக்கு சென்றோம். அங்கிருந்து மூன்று பேருன் கண்டெசா காரில் நேராக சென்றோம்.
ஆனால், அங்கு கேட்டை திறக்கவில்லை. எவ்வளவோ மன்றாடிப்பார்த்தும் கேடை திறக்க மறுத்து விட்டனர். அப்போது ஒரு முடிவுக்கு வந்தோம். டிரைவரை அழைத்து காரை ரிவர்ஸ் எடுத்து கேட்டை உடைத்து உள்ளே போக சொன்னோம். காரை ரிவர்சஸ் எடுத்த சத்தத்தை கேட்டவுடனே அந்த தோரணையை பார்த்த உடனே தானாக கேட்டை திறந்தனர். உள்ள போனோம். அப்போது அங்கே முன்னாள் அமைச்சர் ராஜாராமனும், ரஜினிகாந்தும் உள்ளே இருந்தனர். அப்போது ரஜினி காந்த் பேசியது எங்களுக்கு கேட்டது. அவர், 'அய்யோ அந்தம்மா பாவம் உள்ளே விடுங்கப்பா'' என அக்காவுக்காக குரல் கொடுத்தார், நான் அப்பொழுதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்'' என சசிகலா தெரிவித்துள்ளார்.