Kathir News
Begin typing your search above and press return to search.

'இன்னா செய்தாரை ஒறுத்தல்' - வைகோ-வை நலம் விசாரித்த பிரதமர்.. உணர்ச்சிவசப்பட்ட வைகோ!

இன்னா செய்தாரை ஒறுத்தல் - வைகோ-வை நலம் விசாரித்த பிரதமர்.. உணர்ச்சிவசப்பட்ட வைகோ!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2021 5:45 PM IST

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற குறளுக்கு ஏற்ப இன்று நாடாளுமன்றத்தில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எப்படி சுமூகமாக நடத்துவது என்பது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான வைகோ கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும் போது , "இந்தியா ஒரு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கின்ற விதத்தில் கூட்டாட்சி கொள்கைக்கு வேட்டு வைக்க முனைகிறது மத்திய அரசு" என்று கடுமையாக விமர்சித்தார்.

இப்படி பேசினாலும் இடைவேளையின் போது எந்த ஒரு எண்ணமும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பிரதமர் மோடி நேராக வைகோவிடம் சென்று பேசினார். வைகோவின் கையைபிடித்து குலுக்கி நலம் விசாரித்தார். திடீரென பிரதமர் மோடி தன்னிடம் நலம் விசாரித்ததால் உணர்ச்சிவயப்பட்டவராக வைகோ காணப்பட்டார். மற்ற எம்.பி-க்கள் திகைத்து நின்றனர்.

கருத்துக்கள் ரீதியாக பிரதமரை எதிர்த்து பேசினாலும், அதை மனதில் கொள்ளாமல் பிரதமர் வைகோ-வை நேரில் சென்று விசாரித்தது அங்கிருந்தவர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News