Kathir News
Begin typing your search above and press return to search.

மாதம் ஒருமுறை மின் கட்டணம் என வாக்குறுதி குடுத்தீர்களே நிறைவேற்றுங்கள்! தி.மு.க மீது பாயும் முன்னாள் அமைச்சர் !

மாதம் ஒருமுறை மின் கட்டணம் என வாக்குறுதி குடுத்தீர்களே நிறைவேற்றுங்கள்! தி.மு.க மீது பாயும் முன்னாள் அமைச்சர் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 July 2021 3:00 PM IST

"மின்சார கட்டணம் கணக்கிடும் முறையை மாதம் ஒருமுறையாக மாற்றி அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தற்போதைய தி.மு.க ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். தேர்தலின் போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் அள்ளி வீசிய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது வீடுகளுக்கான மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையில் இருந்து மாதம் ஒரு முறையாக மாற்றி அமைக்கப்படும் என்பது தான்.

அம்மாவின் ஆட்சி காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை தற்போதைய தி.மு.க ஆட்சியாளர்கள் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி திண்டுக்கல், மதுரை, உட்பட பல மாவட்டங்களில் பல மணி நேரம் பகலிலும் இரவிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள்.மீண்டும் மின்கம்பிகளில் துணி காயப்போடும் சூழ்நிலை வந்துவிட்டதே என்று மக்கள் புலம்புகிறார்கள், மேலும் தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை வசூலிக்கப்படுவதுடன் டெபாசிட் தொகையையும் செலுத்த சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த தி.மு.வ அரசு நிறைவேற்ற வேண்டும்" என அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News