Kathir News
Begin typing your search above and press return to search.

நான் யார்ட்ட பர்மிஷன் வாங்கனும்? மணல் கடத்தலை தடுத்த டி.எஸ்.பியிடம் எகிறிய ஒரத்தநாடு தி.மு.க நிர்வாகி!

நான் யார்ட்ட பர்மிஷன் வாங்கனும்? மணல் கடத்தலை தடுத்த டி.எஸ்.பியிடம் எகிறிய ஒரத்தநாடு தி.மு.க நிர்வாகி!

Mohan RajBy : Mohan Raj

  |  20 July 2021 10:00 AM GMT

அரசு நிலத்தை ஆக்கிரமித்து விதிக்கு புறம்பாக தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக தி.மு.க நிர்வாகியான நாதன் செல்வராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணதங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாதன் செல்வராஜ் தி.மு.கவில் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தனக்குச் சொந்தமான விவசாயம் நிலம் அருகே உள்ள மூரியன் குட்டை எனப்படும் குளத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் அந்த இடத்தில் ஜே.சி.பி மூலம் மணல் எடுத்து டிராக்டர் மூலம் கொண்டு செல்வதாக ஒரத்தநாடு டி.எஸ்.பி சுனிலுக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து டி.எஸ்.பி சுனில் நேரில் சென்று அரசு இடத்தில் மணல் எடுக்க உரிய அனுமதி பெற்றுள்ளீர்களா எனக் கேட்டுள்ளார். அதற்கு நாதன் செல்வராஜ், "இடம் என்னுடையது. நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை" என வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி சுனில், தாசில்தார் சீமானுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சீமான், வி.ஏ.ஓ சுபாஷினி, சர்வேயர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட இடத்தை அளந்தனர். இதில் நாதன் செல்வராஜ் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து நாதன் செல்வராஜ் உள்ளிட்ட 5 பேரை காவல்துரையினர் கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source - ஜூனியர் விகடன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News