"தர்மபுரி மாவட்டத்துல மண்ணை கவ்விட்டோம் இனி தர்மபுரி நம்ம வசமாகனும்" உ.பிக்களுக்கு கட்டளையிட்ட அறிவாலயம்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் மண்ணை கவ்வியதற்கு நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக தி.மு.க களத்தில் இறங்கியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தி.மு.க தோற்று விட்டது. அந்த மாவட்டத்தில் தி.மு.க'வை வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கட்சி தலைமை உத்தரவு போட்டது. இதையடுத்து அ.ம.மு.க துணை பொதுச்செயலராக இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனை, கடந்த மாதம் தி.மு.க வில் இணைத்தனர்.
மேலும் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் உறுப்பினர்களையாவது தி.மு.க'வில் இணைத்தால், பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுப்பதாக அக்கட்சி தலைமை கூறி இருக்கிறது. அதனால், சென்னையிலிருந்து 30 ஆயிரம் தி.மு.க உறுப்பினர் படிவங்களை வாங்கிக் கொண்டு போய், தன் ஆதரவாளர்களிடம் கொடுத்து தீயாய் வேலை செய்து வருகிறாராம் பழனியப்பன். எப்படியாவது தர்மபுரியை தன் வசப்படுத்த தி.மு.க நடவடிக்கை எடுத்து வருகிறது.