இழிவாக பேசியும், கட்டைகளை வைத்து பா.ஜ.க மாநில செயலாளர் சுமதி வெங்கடேசனை தாக்க முயற்சி - காவல் ஆணையரிடம் புகார்!

பா.ஜ.க மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் காரை தாக்க முயற்சி செய்த மர்ம நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பபட்டுள்ளது.
பா.ஜ.க மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் சென்னை பாடி புதுநகர் ஆவின் பால் பூத் அருகே கடந்த 19-ஆம் தேதி மதியம் காரில் தனது மகளுடன் பா.ஜ.க அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார், அப்போது மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் காரை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தாக்க முற்பட்டு தகாத வார்த்தைகளில் பிரதமரையும், பா.ஜ.க மாநில தலைவரையும், இழிவாக பேசியதாகவும், கட்சி கொடியை கிழிக்க முயற்சித்ததாகவும் ஜே. ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் நாவலூர் பகுதியை சேர்ந்த பூபதி ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் மற்றும் பா.ஜ.க வழக்கறிஞர் அணி மாநில தலைவர் பால்கனகராஜ் உள்ளிட்டோர் புகார் மனு அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.