Kathir News
Begin typing your search above and press return to search.

"என்னாச்சு உங்க தேர்தல் வாக்குறுதிகள்?" - தி.மு.கவிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்த அ.தி.மு.க!

என்னாச்சு உங்க தேர்தல் வாக்குறுதிகள்? - தி.மு.கவிற்கு எதிராக போராட்டத்தை அறிவித்த அ.தி.மு.க!

Mohan RajBy : Mohan Raj

  |  23 July 2021 2:45 PM GMT

தி.மு.க வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வீடுகளின் முன்பு நின்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "விலைவாசி உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வாக்குறுதி, மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்க, நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும், பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டம் நடைபெறும்" என அ.தி.மு.க'வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News