பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது - தமிழகத்தில் பிரதான கட்சியாகிய உருமாறிய பா.ஜ.க!
By : Mohan Raj
பொதுவெளியில் பிரதமர் மோடி, தி.மு.க பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா பொது வெளியில் இந்து சமயத்தை பற்றியும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றியும், பாரத மாதா பற்றியும், தி.மு.க'வை பற்றியும் இழிவாக பேசிய விவகாரத்தில் தமிழக பா.ஜ.க, இந்து முன்னணி முன்னேடுத்த தொடர் போராட்டங்களால் கைது இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசும், தி.மு.க கட்சியை சேர்ந்தவர்களும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா பேசியதை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த நிலையில், தமிழக பா.ஜ.க-வும், இந்து முன்னணியும் அவரின் இழிவான பேச்சை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை போன்ற தமிழகத்தின் பல பகுதிகளில் தமிழக பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதன் விபரீதத்தை புரிந்து கொண்ட தி.மு.க அரசு இன்று மாலை அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலையில் சமூக சீர்கேட்டை விளைவிக்கும் செயல்களை எதிர்த்து போராடக்கூடிய கட்சியாகவும், போரட்டங்களால் ஆளும் அரசை கேள்வி கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வலு உள்ள கட்சியாகவும் தமிழக பா.ஜ.க விளங்கி வருவது இதன் மூலம் தெளிவாகிறது.