வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுக்கும் வேளையில் இறங்கிய தி.மு.க அரசு!

ஆட்சியை கவனிக்காமல் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை இழுக்கும் வேலையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிவிப்பு விடுத்திருந்தார். இதை காரணம் காட்டி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் வேளையில் தி.மு.க இறங்கியது. இதனையடுத்து ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் 3 மாவட்டச் செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க'வில் இணைந்தனர்.
இன்டு நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணிச் செயலாளர்கள், வர்த்தக அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளனர். இதுதான் சமயம் என காத்திருந்து ரஜினி மன்ற நிர்வாகிகளை தி.மு.க இழுக்கும் வேலையை ஜரூராக துவக்கியுள்ளது. ஆட்சியில் இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கட்சியை பலப்படுத்தும் வேளையில் ஸ்டாலின் இறங்கியுள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.