அப்துல்கலாம் நினைவுநாளை புறக்கணித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!

இந்தியா முழுவதும் நேற்று மறைந்த அப்துல்கலாம் அவர்களின் ஆறாவது நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்துல்கலாம் பற்றி குறிப்பிடாமல் புறந்தள்ளியுள்ளார்.
நேற்று இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் தங்கள் நினைவுகளையும், வணக்கங்களையும் பகிர்ந்து கொண்டனர். பல இடங்களில் மறைந்த அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ஆனால் தற்போதைய தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் கூட அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவோ, மரியாதை நிமித்தமாக நினைவுகள் பதியவோ இல்லை. அவ்வளவிற்கும் அப்துல்கலாம் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர், ஸ்டாலின் தமிழக முதல்வர். அரசு முறையாக கூட மறைந்த அப்துல்கலாம் அவர்கள் ஸ்டாலின் நினைவு கூற கூட வில்லை.
மறைந்த தி.மு.க தலைவரும், தற்போதைய முதல்வரின் தகப்பனாருமாகிய கருணாநிதி அப்துல்கலாம் அவர்கள் "கலாம் என்றால் கலகம்" என்றார். தகப்பன் கூறினார், மகன் அவ்வாறே புறக்கணிக்கிறார்.