"ராஜகண்ணப்பனும் நானும் கட்டிபிடிக்கும் அளவிற்கு நெருக்கமானவர்கள்" - பிளாஸ்டிக் நாற்காலி பற்றி திருமாவளவன்!

"அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார்" என ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தது பற்றி விளக்கமளித்துள்ளார் திருமாவளவன்.
சமீபத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்திருக்க திருமாவளவன் உடைந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். கைகட்டி பவ்யமாக அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்த திருமாவளவன் கூறியதாவது, "அந்த ப்ளாஸ்டிக் சேரை நானே தான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். எனக்கு என்ன தேவை இருக்கிறது நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே. குதர்க்கவாதிகள், காழ்ப்புணச்சி கொண்டவர்கள்,விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேறு பூச வேண்டும் என நினைக்கிறார்கள்" என்றார்.
மேலும், "நான் கையகட்டி உட்கார்ந்திருந்தால் எனக்கு எந்த பயமும் இல்லை என்று அர்த்தம்... அண்ணன் ராஜகண்ணப்பன் எனது உடன்பிறந்த சகோதரர் மாதிரி. நான் அவரை கட்டிப்பிடிப்பேன். அவர் என்னை கட்டிப்பிடிப்பார். எங்களுக்குள் எந்த இடைவெளியும் கிடையாது'' என தெரிவித்துள்ளார் திருமாவளவன்.