ஊழலுக்கு பெயர்பெற்ற தி.மு.க இந்து கோவில் நகைகளில் கை வைப்பதா? போராட்டத்தை அறிவித்த இந்து மக்கள் கட்சி !
By : Mohan Raj
ஊழலுக்கு பெயர் போன தி.மு.க இந்து சமய கோஙில்களின் தங்க நகைகளில் கை வைப்பதா என ஆவேசமாக இந்து மக்கள் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.
தி.மு.க ஆட்சியமைத்த பிறகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விடுத்த அறிக்கையில் கோவில் நகைகள் அனைத்தையும் தங்ககட்டிகளாக மாற்றி அதனை வங்கிகளில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
தி.மு.க அரசின் இந்த முடிவு பல தரப்பில் எதிர்ப்புகளை கிளப்பியுள்ள நிலையில் இந்து மக்கள் கட்சி இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஊழலுக்கு வழிவகுக்கும் இம்முடிவை கைவிட கோரிக்கை! அறங்காவலர்கள் நியமிக்காமல், பக்தர்கள் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எப்படி முடிவு செய்ய முடியும்? என்ற கேள்வியுடன் வரும் 27'ம் தேதி திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டத்தை அறிவித்துள்ளது.