Kathir News
Begin typing your search above and press return to search.

"யப்பா கட்சிக்கு ஆள் சேருங்கப்பா, தங்க மோதிரம் தர்றோம்" - சீட்டு கம்பெனி போல் இறங்கிய காங்கிரஸ் !

யப்பா கட்சிக்கு ஆள் சேருங்கப்பா, தங்க மோதிரம் தர்றோம் - சீட்டு கம்பெனி போல் இறங்கிய காங்கிரஸ் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Sept 2021 3:45 PM IST

"எப்படியாவது காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர்களை சேருங்கள் தங்க மோதிரம் பரிசாக தருகிறோம்" என காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் கூறியுள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் தலைவர் இல்லாததால் தடுமாறுகிறது என அனைவரும் கூறி வந்தாலும் காங்கிரஸார் மட்டும் "நாங்க ஸ்டிராங் தெரியும்ல்ல" என கூறிவந்தது அனைவராலும் வேடிக்கையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் எப்படியாவது கட்சிக்கு உறுப்பினர்கள் சேருங்கள் தங்க மோதிரம் தருகிறோம் என மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் மாநில தலைவர் கே.எஸ்.அழகிர் முன்னிலையில் கூறியது காங்கிரஸ் கட்சி என்றாலே மக்களை எந்தளவிற்கு ஓடுகிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டியுள்ளது.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பார்வையாளர் ஸ்ரீவல்லபிரசாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்பொழுது கட்சி நிர்வாகிகளை ஆட்களை சேர்க்க வைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை மாவட்ட தலைவர் முத்தழகன் அறிவித்தார். அதில், "காங்கிரசில் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும். 2'வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 4 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். மற்றவர்களுக்கு தங்க நாயணங்கள் வழங்கப்படும்" என்று அவர் அறிவித்தார்.

தங்கத்தை காட்டியாவது கட்சிக்கு ஆட்களை இழுக்க முடியுமா என தமிழக காங்கிரஸார் முட்டி மோதி பார்த்து வருகின்றனர்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News