Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை! தேசிய கீதமும் இல்லை! - விடியல் முதல்வர் ஸ்டாலினின் அதிசய அரசு விழா !

தமிழ்த்தாய் வாழ்த்தும் இல்லை! தேசிய கீதமும் இல்லை! - விடியல்  முதல்வர் ஸ்டாலினின் அதிசய அரசு விழா !
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Sept 2021 5:00 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி என்றால் அந்த நிகழ்வின் தொடக்கத்தின் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இது அரசு மரபில் ஒன்றாகும், ஆனால் சேலம் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. அதுவும் பள்ளியில் நடத்தப்பட்ட விழாவில்.

வாழப்பாடியில் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் ஒலிக்கப்படவில்லை. இதை விழாவுக்கு வந்திருந்தவர்கள் கண்டு உணர்ந்து அதிருப்தி அடைந்தனர். முதல்வர் ஸ்டாலின் இதனை கண்டுகொள்ளாமல் அங்கிருத்து புறப்பட்டார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News