Kathir News
Begin typing your search above and press return to search.

துரைமுருகனை கலங்கடிக்கும் தி.மு.க'வின் உள்ளடி வேலைகள் !

துரைமுருகனை கலங்கடிக்கும் தி.மு.கவின் உள்ளடி வேலைகள் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 Sept 2021 5:15 PM IST

"எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது" என துரைமுருகன் கொதித்திருப்பது தி.மு.க'விற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலுாரில் நடந்த கூட்டத்தில் பேசிய துரைமுருகன் கூறியதாவது, "எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன் பிறகு எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்தோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்றார்.

இப்படி பேசியது தி.மு.க'வில் இருப்பவர்களையே கடுப்படைய செய்துள்ளது. காட்பாடி எம்.எல்.ஏ'வாகவும், தன் மகன் கதிர் ஆனந்த்'தை வேலூர் தொகுதி எம்.பி'யாகவும் வைத்திருக்கும் துரைமுருகன் கட்சியினர் மீதே இப்படி கடுப்படிக்க காரணம் இருக்கிறது என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க'வினர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் இரவு வரை துரைமுருகன் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையே இருந்தது. ஆனால் இறுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் துரைமுருகன் வெற்றி பெற கூடாது என உள்ளடி வேலை பார்த்த தி.மு.க'வினரே என்று துரைமுருகன் நினைக்கினார் ஆகையினால் தான் எனக்கெதிராகவே அரசியல் செய்கிறீர்களா என கொதித்துள்ளார் துரைமுருகன் அதன் வெளிப்பாடுதான் இந்த வார்த்தைகளே என கூறுகின்றனர்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News