அடங்கமறு! அத்துமீறு! ஆனால் அறிவாலயத்தில் பதுங்கு - போராட்டத்தை வாபஸ் வாங்கிய திருமாவளவன் !

அடங்க மறு, அத்து மீறு வகையறா திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு அடங்கியபடி "வி.சி.க அறிவித்த போராட்டங்களுக்கு இனி அவசியம் இருக்காது" என பம்மியுள்ளார்.
சேலம் மாவட்டம் மோரூரில் சில நாட்களுக்கு முன்னர் வி.சி.க கொடியை அக்கட்சி தொண்டர்கள் ஏற்ற முயன்றபோது பிரச்சினை வெடித்தது. வி.சி.க கொடிக்கம்பத்தை அகற்றிய போலீஸ் மீது தொண்டர்கள் கல்வீச்சு நடத்தியதால் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனையடுத்து முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன் சென்னை, சேலம், உள்ளிட்ட ஊர்களில் காவல்துறை ஏவல்துறையாகிவிட்டது என முழங்கி போராட்டத்தையும் அறிவித்தார்.
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து திருமாவளவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் காவல்துறை செயல்பாடு குறித்து முதல்வரிடம் தெரிவித்ததாக கூறினார். மோரூரில் வி.சி.க கொடியை ஏற்ற பிற கட்சிகள், சமூகத்தவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் போலீஸ் நடவடிக்கையால் தான் கலவரம் மூண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.
காவல் துறை குறித்த முறையீட்டை கவனமாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின், இப்பிரச்சினையை கவனத்தில் கொள்வதாக கூறினார். ஆகவே விசிக அறிவித்த போராட்டங்களுக்கு இனி அவசியம் இருக்காது என்றும் திருமாவளவன் தெரிவித்தார். அடங்கமறு, அத்துமீறு என வலம் வந்த திருமாவளவன் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் பதுங்கியிருக்கிறார்.